மக்களின் சமூக வலைதள மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. பொழுதுபோக்கிற்கு என்று ஆரம்பித்து இப்பொழுது அதற்கே அடிமை ஆகி கிடக்கிறோம். பேஸ் புக், இன்ஸ்டாகிராமிற்கு பிறகு இப்பொழுது நம்மை கட்டிப்போட்டிருப்பது டிக் டாக்.
சோஷியல் மீடியாவில் ஏதாவது ஒரு பகிர்வு அடிக்கடி வைரல் ஆகுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு சோஷியல் மீடியா ஆப் வைரலாகி வருகிறது என்றால் அது டிக்டாக்தான் (Tik Tok).
சிறிய அளவிலான வீடியோக்களை ஷேர் செய்ய அறிமுகமான தளம்தான் இது. ஆனால் இன்று இளைஞர்களை, அதிலும் இளம் பெண்களை அடிமையாக்கிவிட்டது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை கிடையாது.

(TikTok) டிக்டாக்கில் பாடலுக்கு நடனமாடி அதை பதிவேற்றம் செய்வதில் இளம் பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த வீடியோக்களுக்கு வரும் லைக்ஸ்(Likes) , பாராட்டு கமெண்ட்டுகள்(Comments) இவர்களுக்கு ஒருவித போதையை ஏற்படுத்தி தொடர்ச்சியாக டிக்டாக்கில் அடிமையாக வைத்திருக்க உதவுகிறது. திரைப்படங்களில் வரும் பிரபலமான வசனங்களையும் பாடல்களையும் ஒத்திசைத்து நடித்து 60 வினாடி வீடியோவாக ஷேர் செய்து மகிழ்வதோடு டிக் டாக் நின்றுவிடுவதில்லை. நம் வாழ்க்கையையே திருப்பி போடும் அளவிற்கு நாம் துளியும் எதிர்பார்க்காத பல விளைவுகளை அது விளைவிக்கக்கூடும். உளவியல் ரீதியாகவே இள வயதினரில் நான்கில் மூன்று பேருக்கு சமூகத்தில் பிரபலமாக இருக்க வேண்டும் என்கின்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் லைக் மற்றும் ஷேர்- இற்கு ஆசைப்பட்டு தங்களுக்கு முன் பின் தெரியாதவர்கள் இன்பாக்சில் மெசேஜ் செய்யும்போது அதை ஒரு உரையாடலாக எடுத்து செல்வர்.
பெண்கள் சிலர் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க ஆபாசமாக உடைகள் அணிந்து டிக் டாக் வீடியோக்கள் செய்து பகிர்வது வழக்கமாகி வருகிறது. இது அவற்றை பார்க்கும் ஆண்கள் மட்டும் அல்லாது குழந்தைகள் மத்தியிலும் சஞ்சலத்தை ஏற்படுத்தும்.
ஆனால் இதில் மற்றொரு விபரீதமும் உள்ளது. ஆபாச கருத்துக்களை கமெண்ட்டுகளாக போடும் நெட்டிசன்கள் ஒருபக்கம் என்றால், இந்த குடும்ப பெண்களின் வீடியோ, மற்றும் அவர்கள் உருவ படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அதை ஆபாசமாக சித்தரித்து அதற்குரிய வெப்சைட்டுகளில் பதிவேற்றி ரசிப்போர் மற்றொரு பக்கம். இதனால் பல குடும்ப பெண்களின் வாழ்க்கை சீரழிந்து போகிறது.

டிக்டாக் செயலி குறித்தும் அதில் பதிவிடப்படும் வீடியோக்கள் குறித்தும் பலமுறை விரிவாக எச்சரித்தாலும் நம்ம ஊர் பெண்கள் சிலர் அதனை பெண்ணிய அடக்கு முறையாக நினைத்து காதில் போட்டுக் கொள்வது கிடையாது.
காலம் காலமாக பெண்களை ஒரு பொருளாகவே பார்த்து பழக்கப்பட்ட சில சமூக விரோதிகளின் கைகளில், பெண்களின் புகைப்படங்கள் கிடைத்தாலே ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடும் இந்த காலத்தில், அவர்களுக்கு ஏற்ற முகபாவத்துடன் ஆடிப் பாடி வீடியோ வெளியிட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
இருந்தாலும் ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்த நான் கேள்வி பட்ட பல கதைகளில் ஒரு கதையை இங்கே பதிவிடுகிறேன்.

பெங்களூர் நகரையடுத்து ஆனேக்கல் பகுதியிலுள்ள ஒரு 20 வயது கல்லூரி பெண்ணுக்கும் நடந்துள்ளது. கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர்தான் அந்த பெண். இவருக்கு சுமார் 1.3 லட்சம் ஃபாலோவர்கள் இருக்கிறார்கள் என்றால், எந்த அளவுக்கு இவர் டிக்டாக் ஆப்பில் பிரபலம் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். இதுவரை அவர் பெற்ற லைக்ஸ் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டுமாம். கடந்த ஜனவரி மாதம் முதல், கவிதாவை ஆபாச பட நடிகை போல சித்தரித்து, மார்ப்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் சுற்ற ஆரம்பித்துள்ளன. இது கவிதா கவனத்திற்கு வந்தபோது இடிந்தே போய்விட்டார். என்ன செய்வது என்று யோசித்து, இந்த தகவலையும் அவரே ஒரு வீடியோவில் கூறி, இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து அதையும் டிக்டாக்கில் பதிவேற்றினார். ஆனால், பிரச்சினை அதிகரித்ததே தவிர, ஓய்ந்தபாடில்லை. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான, கவிதா, இதுகுறித்து, பெங்களூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இப்படி இன்னும் எத்தனையோ கதைகள்.
பெண்களே.... சம உரிமை Feminism என்று TikTok செய்வேன் என்று சாக்கு சொல்லிக்கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். இல்லை இது எங்களுக்கு கிடைத்த freedom சம உரிமை என்றால் சம உரிமை கோர இன்னும் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றனவே... சீதனத்திற்கு எதிராக குரல் கொடுங்கள்....ஆண் பிள்ளைகள் பெற்றால் ஆணும் பெண்ணும் ஒன்றே என்று சொல்லி கொடுங்கள்..... கணவனின் பொருளாதார பிரச்சனைகளில் பங்கு கொள்ளுங்கள்..... கல்வியிலும் தொழிலிலும் தொழில்நுட்பத்திலும் ஆண்களுக்கு நிகராக போட்டி போடுங்கள்..... தந்தை கடன் பட்டு இருந்தால் அண்ணனோ தம்பியோ அடைப்பான் என்று விலகி நிற்காமல் அதில் பங்கு கொள்ளுங்கள்....சுயமாக bill pay பண்ணுங்கள்.... இது போன்றவைதான் உண்மையான சம உரிமை.
சிலர் என்னுடைய நடிப்பு திறமையை காட்ட தான் செய்கின்றேன் என்றால் ஆட்சேபனை இல்லை.. வரைமுறை பேணுவது சால சிறந்தது. ஆடை விடயத்திலும் சரி TikTok செய்யும் concept selectionலும் சரி தனி மனித ஒழுக்கம் முக்கியம்.
தங்களது குழந்தைகள் டிக் டாக்-ஐ உபயோகிப்பது தெரிந்தால் பெற்றோர்கள் கவனமாக இருப்பது முக்கியம். அது போல பெண்களும் நேர்த்தியான முறையில் தங்களை தாங்களே காண்பித்துக்கொள்வதும் முக்கியம். இல்லையேல் அது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.