Search This Blog

Thursday, July 31, 2025

ஒரு துவார மூச்சு


எத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் 

கருவென சுமக்கிறேன்- சொல்லாமலே விட்ட

என் காதலை..


கண்ணுக்குள் சிறைவைத்தேன்-அவளை…

கனவுகளில் கூட அவளுடனே திரிந்தேன்…

மௌனமாய் ரசிப்பதிலே சுகம் கண்டேன்…

அவள் அசைவுகளை எல்லாம்

வரிகளாக்கினேன்..

பறவைகளுக்கு மட்டும் அல்ல

என் பேனாக்கும் சிறகுகள் முளைத்தது

அவளை வடிக்கையில்….

கனவினில் அவள் கரம் பற்றி…

காற்றினில் பறந்தேன்…


கனவினில் கட்டிய கோட்டைகளை

அவளிடம் சொல்ல தைரியம் பிறக்கவில்லை…

சொல்ல துணிந்தும்-நா

வார்த்தைகள் கோர்க்கவில்லை…

சரி

சொல்லாமலே புரிந்து

கொள்வாள் என நினைத்தேன்..

சொல்லாமல் போனதாலோ..என்னவோ… 

இன்று இல்லாமலே போனதென் காதல்....

இதழ்களை பிரிக்காமல்…

மறைத்துக்கொள்ளும் மலரின்-தேன்துளிகள் ஒருபோதும்

தேனிக்களுக்கு கிடைப்பதில்லையே…


ரோஜாவாக பிறக்க வேண்டிய நான் ..

முள்ளாய் பிறந்துவிட்டேன் ...!!!

சொல்லாமல் விட்ட என் காதல் மொட்டு

ஆண்டுகள் பல கடந்தும்

முள்ளாய் தைக்கிறது 

இதயத்தை….

வண்ணமற்ற என் இளமையில்

வரையாத அவள் உருவம்…

மெல்ல என்னை

அரித்துக்கொண்டிருக்கின்றது கரையானாய்…

விலகியே நிற்கிறேன்…

வலியுடன ..

முயற்சிக்கிறேன் ....

உன்னை கண்டவுடன் ....

ஒரு பொய் சிரிப்பு சிரிக்க ....

உதட்டுக்கு முன்னரே ....

முந்தி கொண்டு ..

கண்ணீர் விட்டுவிடுகிறது .....

கண்கள் .......!!!


ஆனால்

இன்னும் பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன்…

அவளின் நினைவுகளை…

காயம் பட்ட என் நெஞ்சை-வருடும்

மயிலிறகாய்….


இவள்

பஸீன் றிபாயா சமீம்

1 comment:

Dark Side of Trending Penguin 🐧

 Dark Side of Trending Penguin 🐧  இன்றைக்கு சமூக வலைத்தளம் முழுவதும் பேச்சு பொருளாய் மாறி இருக்கு ஒரு பென்குயின்…70km தூரம் எதையும் யோசிக்க...