Dark Side of Trending Penguin 🐧
இன்றைக்கு சமூக வலைத்தளம் முழுவதும் பேச்சு பொருளாய் மாறி இருக்கு ஒரு பென்குயின்…70km தூரம் எதையும் யோசிக்காமல் கடந்து சென்ற அதோட தன்னம்பிக்கை, மன தைரியம் எல்லாமே கொண்டாடப்படுகிறது….
நிற்க…
ஆனா இங்க மறைக்கப்பட்ட இன்னொரு ஜீவனோட உணர்வுகள் கவனிப்பாரற்று கிடக்கிறது…அந்த பயணத்தில் யாருமே கவனிக்காத ஒரு அமைதியான இன்னொரு பென்குயின் பற்றிய உண்மை இருக்கிறது… 🥺
உன்னை நம்பி…
தன் கூட்டத்தையும் துச்சமென
தூக்கியெறிந்து…
நீயே கதியென உன் கூடவே
வந்த மற்றைய பென்குயினை
தனியே தவிக்க விட்டு போய் விட்டாயே…
அதன் உணர்வுகளை நீயும் மறந்து விட்டாய்…
இந்த சமூகமும் ஒதுக்கி விட்டது… 😫
உன் இலக்கு முக்கியம் தான்…
உன் கொள்கையும் முக்கியம் தான்…
ஆனால் உனக்காக அனைத்தையும்
உதறி தள்ளிட்டு வந்த அந்த
அப்பாவியும் முக்கியம் தானே… 😔
திரும்ப கூட்டத்திற்கும் போக முடியாம
உன் கூட தொடரவும் முடியாம
பரிதவித்த அந்த நொடியில்
அதன் இருதயம் நொருங்கி
போய் இருக்காதா…!!! 🥺
அதே இடத்தில் சிலை போல் நின்ற
அந்த பேசப்படாத இன்னொரு பென்குயினை போலே
எம் சமுகத்தில் எத்தனை பேர் இருப்பார்கள்…
ஒருவரின் முன்னேற்றத்திற்காய்
தன்னலம் பாராது பாடுபட்டு…
உறுதுணையாய் நின்று…
துவண்ட நேரங்களில் நம்பிக்கையூட்டி…
உற்ற தோழனாய் தோழ் கொடுத்து…
அவர் முன்னேறும் தருவாயில் அவராலேயே
புறக்கணிக்கப்பட்டு…
பின் தள்ளப்பட்ட உணர்வுகளுடன்
முடங்கிப் போய்…
மன்னித்துவிடு மறக்கடிக்கபட்ட
இன்னொரு பென்குயினே….
உன் தோழனையும்… என் சமூகத்தையும்…
இவள்,
பஸீன் றிபாயா சமீம்

Best
ReplyDelete