Search This Blog

Tuesday, June 2, 2020

பிஞ்சுகளை பாதுகாப்போம்



...பிஞ்சுகளை பாதுகாப்போம்...
அண்மையில் ஜோதிகா நடிப்பில் Amazon prime இல் வெளியிடப்பட்ட OTT படமான 'பொன் மகள் வந்தாள்'  என்ற படத்தை காண கிடைத்தது..
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டிய விதம்
பாலியல் தொல்லைகளுக்குப் பின்னால் எவ்வளவு துயரம் இருக்கிறது என்பதை இந்த பொன்மகள் உணர்வுபூர்வமாய் உருக்கமாய் சொல்கிறாள். தாமதமாகக் கிடைக்கும் நீதியும் அநீதிதான் என்பதைச் சொல்ல வரும் படம். கூடவே, பெண் குழந்தைகளை மட்டும் சொல்லிச் சொல்லி வளர்க்காதீர்கள், ஆண் குழந்தைகளையும் சொல்லிச் சொல்லி வளருங்கள் என்கிறார்கள். நல்ல கருத்து, நல்ல கதை.. படம் பார்த்து விட்டு என் மனத்தில் தோன்றிய வெறுமையை வரிகளில் தர எத்தனிக்கிறேன்.
சிறு மலராக மலர்ந்து எதிர்காலம் பற்றிய கனவுகளுடன் வளரும் பிஞ்சுக்குழந்தைகளை பாதுகாத்து பூங்காவாக பூத்துக்குலுங்க விடுவதை விட்டு அவர்களை நசுக்கி எதிர்காலத்தை வெறும் சருகுகளாக்குவதென்பது ஏற்றுக்கொள்ளபட முடியாத விடயமாகும்.
தாயின் கருவிலிருந்து சிதையாமல் வெளியே வரும் போதே நாம் வெற்றி பெற்று விடுகிறோம் என்று உரைத்த  பாடல்கள் எல்லாம் தற்போது கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்து நிற்குமளவிற்கு எம்மை சுற்றி ஏகப்பட்ட விடயங்கள் நடந்தேறுகின்றன. 
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்கின்றோம்....  சரி... எதிர்காலத் தலைவர்களுக்கும் தலைவிகளுக்கும் இந்த சமூகத்தில் என்ன வகையான பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்...???
நாளுக்கு நாள் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய செய்திகளும் விழிப்புணர்வு விளம்பரங்களும் ஊடக அறிவித்தல்களும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. தொழில்நுட்பரீதியாக உலகம் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்ற  போதிலும் எம் மத்தியில் இருந்த கடமை... கண்ணியம்...கட்டுப்பாடு... கருணை... காருண்யம்... போன்ற விடயங்களை இழந்து வருகிறோமோ என நினைக்கத் தோன்றுகிறது. இத்தவறை நாம் தெரிந்து செய்கிறோமா - தெரியாமல் செய்கிறோமா என்று இன்னமும் புரியவில்லை.எமது முந்தைய தலைமுறை பேணி வந்த ஒழுக்க விழுமியங்கள் தற்போது எட்டாக்கனியாகி கொண்டிருக்கிறது என்பதென்னவோ கசப்பான உண்மைதான்.
சிறுவர் துஷ்பிரயோகம் என்பது, சிறுவர்களைத் தவறாக வழிநடத்தும் அனைத்து வித தவறுகளையும் குறிக்கும். என்றாலும், விபரமறியா சிறுவர்-சிறுமியரை வயதில் மூத்தவர்கள், தமது பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்கும் இழி செயலையே சிறுவர் துஷ்பிரயோகம் என்ற பதத்தினூடாக இங்கு குறிப்பிடப்படுகின்றது. வயதில் முதிர்ந்த ஒருவர், சிறுவர்-சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, அந்தரங்க உறுப்புக்களைத் தொடுவது அல்லது அன்போடு அரவணைப்பது போல் தொட்டுத் தழுவித் தனது ஆசையைத் தீர்த்துக்கொள்வது போன்ற இழி செயல்கள் பல மட்டத்திலும் நடந்தேறி வருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளுக்குள்ளாகும் சிறுவர்-சிறுமியர் உளவியல் ரீதியில் பாரிய பிரச்சினைக்குள்ளாகின்றனர். இது சட்ட ரீதியில் பாரிய குற்றமாக இருப்பினும், இவ்விதம் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்காமல் குடும்ப கௌரவத்திற்காக மூடி மறைக்க முற்படுவதனால், இந்தக் குற்றம் காட்டுத் தீ போல் பரவி வருகின்றது.
குழந்தை பிறந்ததும் இப்போதைய தாய்மாரின் கவலை எவ்வாறு பாதுகாப்பது -  இந்த நரக உலகத்தில் சிறந்த எதிர்காலத்தை எப்படி காண்பிப்பது என்பதுதான்.   தாய், தந்தை, சகோதரன், சகோதரி சித்தப்பா, சித்தி பெரியப்பா பெரியம்மா தாத்தா பாட்டி ஏன் ஆசிரியர் என அனைத்து உறவுகளையும் சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியுள்ளது. 
இன்றைய நாளேடுகளிலும் சமூகவலைதளங்களிலும்  அண்ணன் தங்கையை துஷ்பிரயோகம், அப்பா மகளை துஷ்பிரயோகம், ஆசிரியர் மாணவனை துஷ்பிரயோகம் என செய்திகள் வருவதை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 
முதலில் இத்தகைய கொடுமை உலகில் அன்றாடம் நடந்து வருகின்றது என்ற அறிவு குறிப்பாக பெற்றோருக்கு இருப்பது அவசியமாகும். அறிவு இருந்தால் தான் அவதானமாக இருக்கலாம். பாலியல் விடயத்தில் யாரையும் எடுத்த எடுப்பில் நம்பிவிட முடியாது. பகிரங்கக் குற்றவாளிகளை விட நல்லவர்களாக நடப்பவர்கள் தான் குடும்பத்துக்குள்ளும், தம்மை அண்டி வாழ்பவர்களிடமும் இந்தக் குற்றத்தைப் புரியும் அபாயம் இருக்கின்றது. எனவே, அனைவர் விடயத்திலும் பெற்றோர் விழிப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியமாகும்.
வீட்டில் தனியாக ஓர் ஆண் இருக்கும் போது பொருட்கள் வாங்கவோ அல்லது ஏதேனும் உதவிகள் செய்யவோ பெண் பிள்ளைகளை அனுப்பக் கூடாது!
– ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அடுத்தவர் வீட்டில் சிறுவர்-சிறுமியரை உறங்க அனுப்பக் கூடாது!
– அவரவர் வயதுக்கு மூத்தவர்களுடன் நேசத்துடனும், நெருக்கமாகவும் பழக விடக்கூடாது! சம வயதுடையவர்களுடன் நட்பாக இருக்கலாம்!
– தனிமைப்படும் சந்தர்ப்பத்தைக் குறைக்க வேண்டும். சிறுவர்-சிறுமியர் தனிமையில் இருக்கும் போதே துஷ்பிரயோகத்திற் குள்ளாகின்றனர்.
– உறவுக்காரர்கள், அந்நியர்கள், நண்பர்கள், வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் போன்றவர்களுடன் ஒரே கட்டிலில் ஒன்றாக சிறுவர்-சிறுமியரை உறங்க விடலாகாது.
– வீட்டில் நடைபெறும் விஷேடங்களின் போது, பிள்ளைகளின் உறக்கம் குறித்து பெற்றோர் கவனம் செலுத்துவதில்லை. கண்டபடி அவர்கள் உறங்கிவிடுவர். அத்தகைய கலப்பு உறக்க சந்தர்ப்பங்களைக் காமுகர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே, இதில் விழிப்பு அவசியம்!
– சிறுவர்-சிறுமியர் அன்பளிப்புக்களுக்கு ஏமாறாதவர்களாக பழக்குதல் பெற்றோரின் கடமையாகும். சிறுவர்களை பலி கொள்ளும் பாதகர்கள் ‘டொஃபி (மிட்டாய்) தருகிறேன்; சொக்கலேட் தருகிறேன்; பலூன் தருகிறேன். வா!’ என அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுகின்றனர். எனவே, யார் எதைத் தந்தாலும் எடுக்கக் கூடாது; ஏமாறக் கூடாது என்ற கட்டுப்பாடு அவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும்.
– எமது பிள்ளைகள் அடுத்தவர்களிடத்தில் தேவையுடையோராக இருக்கக் கூடாது! தம்மை நாடி தேவையுடன் வருபவர்களிடம் காமுகர்கள் துணிச்சலுடன் கை நீட்டலாம். சிறுவர்களும் தமது தேவை நிறைவேற வேண்டும் என்ற ஏக்கத்தில் அதற்கு இசைந்து செல்லலாம்.
– ஏற்கனவே நன்றாகப் பழகிய ஒருவர் வீட்டிற்கு வந்ததும் நமது சிறுவர்கள் அவர்களைக் காணப் பிடிக்காது ஒளிந்து கொண்டால் அல்லது அவர்களை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்க்க முனைந்தால், அல்லது அவர்களது சிறு விளையாட்டுக்குக் கூட அதிகம் ஆத்திரம் கொண்டால், அவர்கள் மூலம் இவர்கள் விரும்பத்தகாத ஏதோ ஒன்றைச் சந்தித்துள்ளனர் என்பது அர்த்தமாகும். எனவே, சிறுவர்களின் நடத்தைகளில் ஏற்படும் மாறுதல்களை அவதானித்துப் பெற்றோர்கள் அவர்களை வழிநடத்த வேண்டும்.
யாரென்று தெரியாதவர்கள் எந்த பொருட்களை தந்தாலும் அவற்றை வாங்கக்கூடாது,  தனிமையில் வீட்டில் இருப்பதனை விடுத்து ஏனைய சிறுவர்களுடன் விளையாடுதல் மற்றும் பெரியோர்களின் அரவணைப்பு அவர்களின் சொல் பேச்சு கேட்டல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தால் துஸ்பிரயோகத்தில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என எடுத்து கூறப்பட்டது.
வித்தியசமான முறையில் தொடுதல், உரசுதல் போன்றவற்றில் யாராவது செயற்பட்டால் முதலில் பெற்றோருக்கு தெரியப்படுத்துமாறு இதன்போது சிறுவர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட வேண்டும்.
– அத்துடன் பெற்றோர் பிள்ளைகளை சதாவும் தமது கண்காணிப்பில் வைத்திருப்பதன் மூலமும், அவர்களுடன் அன்புடனும் நெருக்கத்துடனும் பழகுவதன் மூலமும் பிள்ளைகள் துஷ்பிரயோகத் திற்குள்ளாகுவதைப் பெரும் அளவில தவிர்க்க முடியும்.
– அத்துடன் பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும், சிறுவர்-சிறுமியர் சந்திக்கும் ஆபத்துக்கள் குறித்தும் சிக்கலான சந்தர்ப்பங்களில் தம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
– குழந்தைகள் தமது பிரச்சினைகளைப் பெற்றோர்களிடம் கூறக் கூடிய அவகாசத்தையும், நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வதுடன் அதற்கான துணிவையும் அவர்களுக்கு அளிக்கவேண்டும்.
– அடுத்தவர்கள் நட்புக்காகவும், அன்புக்காகவும் தீண்டத்தக்க உறுப்புக்கள் எவை? தீண்டக் கூடாத உறுப்புக்கள் எவை என்ற தெளிவு அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.
– தவறைத் துணிவுடனும், உரத்த தொனியிலும், உறுதியுடனும் மறுக்கும் துணிவு அவர்களுக்கு ஊட்டப்படுவதுடன், தேவைப்பட்டால் ஆபத்தின் போது எப்படித் தப்ப முடியும்? என்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவேண்டும்.
இவ்வாறு, பெற்றோர்கள் தமது குழந்தைகள் விடயத்தில் விழிப்புடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் நடந்துகொண்டால் எமது சிறுவர்களின் எதிர்கால வாழ்வை நாசப்படுத்தும் துஷ்பிரயோக நடவடிக்கைகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும். இது விடயத்தில் ஒவ்வொரு பெற்றோரும் கூடிய கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
காலமெல்லாம் பெண் பிள்ளைகள் நாங்களே கருகுவதேன்...
கள்ளிப்பால் ஊத்தி கொண்ட காலமும்...
காமப்பால் தீத்துக் கொல்லும் கலியுக காலமும்... பெண்களுக்குதானா....
வீட்டில் பெண் பிள்ளைகளுக்கு எப்படி சொல்லி கொடுத்து வளர்கிறோமோ அதே போல் ஆண் பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்கும் பெண்களை எவ்வாறு பார்க்க வேண்டும், பழக வேண்டும், அணுக வேண்டும், என்றும் சொல்லி கொடுத்து வளர்ப்போமாக...
Fazeen Rifaya Sameem

Sunday, May 3, 2020

திருமண வாழ்த்து


அன்பெனும் நதியினில்-மேலும் கீழும்அலை அடிக்க...
லாவகமாய் அனுசரித்து...
இருவருமே துடுப்பாகி...
வாழ்க்கையெனும் படகினிலே மைல்கள் பல தாண்டி விட்ட உதாரணத் தம்பதியரென
ஊர் போற்ற... உறவும் போற்ற...
எங்கள் வழிகாட்டியாய் வந்த நீங்கள்...
ஒன்றுக்குள் ஒன்றாகி...
உறவுக்கு விளக்கமாகி...
அன்பென்னும் பந்தத்தில்- அரும்பெரும் சுடராகி...
பண்பென்னும் பகுப்பிலே - பலமான விருட்சமாகி...
வாழ்வின் இன்ப வளைவுகளை- வசந்தத்தின் வாசலாக்கி...
உலகமுள்ளவரை இன்புற்று வாழ...
அகம் மகிழ்ந்து அன்பாலே...
வாழ்த்துகிறோம்...

Fazeen Rifaya Sameem 

Saturday, May 2, 2020

மனிதன் மீண்டு வருவான்


மீண்டு வருவான் மனிதன்
பூமியில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு எத்தனையோ இலட்சக்கணக்கான இயற்கை பேரிடர்கள், கொடிய நோய் தொற்றுக்கள் மற்றும் சமூக அழிவுகளை சந்தித்திருக்கிறான். சந்தித்தது மட்டுமன்றி அவற்றை சிறப்பாக வெற்றிகொண்டு மீண்டு வந்து இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கிறான்...
என்றைக்கு மனிதன் கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினானோ அன்றைக்கே இயற்கையை தன்வயபடுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டான்...
இச்சிறப்பான மனிதன் பூமியில் தோன்றிய நாள் முதல் இன்று வரை, அவன் சந்தித்த நோய் ஏராளம்...
கொள்ளை நோய், மலேரியா, கொலரா, அம்மைநோய், யானைக்கால் நோய், இளம்பிள்ளைவாதம் இன்னும் எத்தனையோ... இக்கொடிய நோய்களால் பல லட்சக்கணக்கான மக்கள் இறந்து போயினும் அவற்றுக்கான தடுப்பு மருந்துகளை கண்டு பிடித்தான்... அதில் வெற்றியும் கண்டான்...
இன்றைய இளைய தலைமுறையினர் மேற்கூறிய நோய்களின் பெயரை கூறினால், "அப்படியென்றால் என்ன?! " என்று கேட்கும் அளவுக்கு அவற்றை அழித்து ஒழித்து விட்டான்...
இந்நோய்களை இல்லாதொழிப்பதற்காக 'பென்சிலின்' கண்டு பிடித்தான்; முக்கூட்டு வக்சீன் கண்டு பிடித்தான் ; அம்மைப்பால் கட்டினான்... அதுமட்டுமின்றி நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் சம காலத்தில் தோன்றிய SARS virus(2002-2004), MERS virus(2012-2015),Ebola virus (2013-2016), Swine Flu -H1N1(2009-2010) இன்னும் எலிக்காய்ச்சல், பறவை காய்ச்சல் போன்ற எல்லாவற்றுக்கும் மருந்து கண்டு பிடித்து மீண்டு வந்தான்... இவ்வைரசுகளை இல்லாதொழித்தும் விட்டான்...
அது போலவே இன்றைக்கு கொடிய தாக்கத்தை ஏற்படுத்திகொண்டிருக்கும் Corona Virus க்கும்(COVID-19) மருந்தை கண்டு பிடித்து மனித குலத்தை நிம்மதியாக வாழச்செய்ய மருத்துவ ஆய்வாளர்கள், உயிரியல் விஞ்ஞானிகள் ஓய்வின்றி உழைத்துகொண்டு இருக்கிறார்கள்... அதே போல் பொது மக்களாகிய நாமும் நமது கடமைகளை சரிவர செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
சமூக இடைவெளி பேணுதல், தேவை இல்லாத சந்தர்ப்பங்களில் வெளியில் சுற்றுவதை தவிர்த்தல், முக கவசம் இன்றி பொது இடங்களிற்கு செல்வதை தவிர்த்தல் போன்றவற்றை சரிவர கடைப்பிடிக்க தவறும் பட்சத்தில் நாமும் இந்நோய் தொற்றுக்குட்பட்டு இறந்து போக நேரிடும்.. "தக்கன பிழைக்கும்.. தாகதன அழியும்... "
America, Italy, Spain, France மற்றும் England போன்ற முன்னேற்றம் அடைந்த நாடுகள் இம்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற உரிய வேளையில் பின்பற்ற தவறியமையால் இன்று ஆயிரக்கணக்கான பெறுமதிமிக்க மனித உயிர்களை இழந்து பரிதவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது...
" எப்படி தாமதிக்க பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனானதாக கருதப்படுகிறதோ அதே போல தாமதித்து வழங்கப்படும் மருத்துவமும் உயிரிழப்பிற்கு சமம்"
பொதுவாக Virus ஏனைய நுண்ணங்கிகளைவிட சிறப்பம்சம் கொண்டவை. இவை உயிரற்ற ஊடகங்களில் உயிரற்றதாகவும் உயிர்ப்புள்ள ஊடகங்களில் உயிர்ப்புடனும் தொழிற்படகூடியவை. மேலும் காலத்துக்கு காலம் தன்னை உருமாற்றம் (modification) செய்யும் வல்லமை கொண்டவை. எப்படி மனிதன் உட்பட ஏனைய பிற உயிரினங்களும் பூமியில் வாழ தன்னை விட முன்னேற்றகரமான எச்சங்களை விட்டு செல்ல எத்தனிக்கிறதோ அதே போல் வைரஸ்களும் இருப்பதை விட இன்னும் வீரியமான எச்சங்களை விட்டு செல்ல எத்தனிக்கும்.
America வின் California மாகாணத்தில் இருந்து பன்றிகள் மூலம் மனிதர்களுக்கு தொற்றிய Swine Flu(H1N1) virus ஆனது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்ற பல நாட்கள் எடுத்தன. மேலும் இன்னொரு மனிதருக்கு தொற்றிக்கொள்ளும் போது அதன் வீரியமும் குறைந்து காணப்பட்டது. ஆகையால் மனிதன் அதிலிருந்து தப்பித்து கொள்ளவும், அதற்க்கான மருந்து கண்டு பிடிக்கவும் இலகுவாக இருந்ததது.. இதனால் உயிர் சேதம் பெருமளவில் குறைக்க கூடியதாக இருந்தது.
அதேபோல் SARS, MERS Virusகளும் மிக மிக கொடுமையானவையாக இருந்தபோதிலும் தொற்றிய மனிதர்களிடம் அதிகளவு நோய்க்கான அறிகுறிகளை காட்டின இதன்மூலம் அவற்றில் இருந்து மனிதர்கள் இலகுவாக தப்பித்து கொள்ளவும், விரைவாக மருந்து கண்டு பிடிக்கவும் முடிந்தது.
ஆனால் Corona Virus அப்படியல்ல.. மேற்கூறிய வைரஸ்களை விட 10 மடங்கு வேகமாக பரவக்கூடியது. மேலும் தொற்றுக்குள்ளான நபரில் இருந்து அடுத்த நபருக்கு மின்னல் வேகத்தில் பரவுவதோடு 14 நாட்களுக்கு உடலில் எந்தவித அறிகுறிகளையும் காட்டாது உயிரை குடிக்கவல்லது.
தொற்று ஏற்பட்ட ஒருவரிடமிருந்து சுமார் 400 பேருக்கு மிக விரைவாக பரவக்கூடிய திறன் கொண்டது. 80% பேருக்கு நோய் தொற்றின் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. மருத்துவ பரிசோதனை செய்தாலொழிய நோய் தாக்கத்தை கண்டு பிடிக்க முடியாது.
நோய் தொற்றுக்குள்ளான மனிதன் தும்மினாலோ, இருமினாலோ வெளியேறும் virus இலகுவில் அழிந்து விடுவதில்லை. நீண்ட நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும். இதனாலேயே அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதோடு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதிலும் கால தாமதம் ஏற்படுகிறது.
இருப்பினும் மனிதன் இதற்கான மருந்தை விரைவில் கண்டு பிடித்து மீண்டு வருவான்... மேலும் இனிவரும் காலங்களில் உயிர் வாழும் மனிதனுக்கு குடிநீர் இல்லாது போகும் என்றபோது கடல் நீரை குடிநீராக்கினான்.. மனித இனம் குடியிருக்க நிலமில்லாது போகும் என்ற போது Taiwan, Vietnam, Cambodia போன்ற நாடுகளில் நீர் நிலைகளை குடியிருப்புகளாக. மாற்றினான்... பாலைவன பிரதேசங்களாகிய Dubai, Kuwait, Qatar மற்றும் Israel போன்ற நாடுகளில் கடல் நீரை சுத்திகரிப்பு செய்து பயிர் சாகுபடி செய்து அதிலும் வெற்றி கண்டான்... ஒரு காலத்தில் இப்பூமியில் மனிதயினம் வாழ தட்பவெப்ப சூழல் இல்லாது போனாலும் வான்வெளியில் வாழப்பழகிக்கொள்வான்... இவ்வாறான ஆற்றல் படைத்த மனிதனுக்கு இக்கொரோனாவை அளிப்பது என்பது பெரும் சிரமமல்ல.... மனிதன் Corona வை அழித்து மீண்டு வருவான்...
அப்துல் சமது சமீம்
முன்னால் வங்கி முகாமையாளர்
(Bank of Ceylon)

Wednesday, March 4, 2020

TikTok பரிதாபங்கள்...



மக்களின் சமூக வலைதள மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. பொழுதுபோக்கிற்கு என்று ஆரம்பித்து இப்பொழுது அதற்கே அடிமை ஆகி கிடக்கிறோம். பேஸ் புக், இன்ஸ்டாகிராமிற்கு பிறகு இப்பொழுது நம்மை கட்டிப்போட்டிருப்பது டிக் டாக்.
சோஷியல் மீடியாவில் ஏதாவது ஒரு பகிர்வு அடிக்கடி வைரல் ஆகுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு சோஷியல் மீடியா ஆப் வைரலாகி வருகிறது என்றால் அது டிக்டாக்தான் (Tik Tok).
சிறிய அளவிலான வீடியோக்களை ஷேர் செய்ய அறிமுகமான தளம்தான் இது. ஆனால் இன்று இளைஞர்களை, அதிலும் இளம் பெண்களை அடிமையாக்கிவிட்டது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை கிடையாது.
(TikTok) டிக்டாக்கில் பாடலுக்கு நடனமாடி அதை பதிவேற்றம் செய்வதில் இளம் பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த வீடியோக்களுக்கு வரும் லைக்ஸ்(Likes) , பாராட்டு கமெண்ட்டுகள்(Comments) இவர்களுக்கு ஒருவித போதையை ஏற்படுத்தி தொடர்ச்சியாக டிக்டாக்கில் அடிமையாக வைத்திருக்க உதவுகிறது. திரைப்படங்களில் வரும் பிரபலமான வசனங்களையும் பாடல்களையும் ஒத்திசைத்து நடித்து 60 வினாடி வீடியோவாக ஷேர் செய்து மகிழ்வதோடு டிக் டாக் நின்றுவிடுவதில்லை. நம் வாழ்க்கையையே திருப்பி போடும் அளவிற்கு நாம் துளியும் எதிர்பார்க்காத பல விளைவுகளை அது விளைவிக்கக்கூடும். உளவியல் ரீதியாகவே இள வயதினரில் நான்கில் மூன்று பேருக்கு சமூகத்தில் பிரபலமாக இருக்க வேண்டும் என்கின்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் லைக் மற்றும் ஷேர்- இற்கு ஆசைப்பட்டு தங்களுக்கு முன் பின் தெரியாதவர்கள் இன்பாக்சில் மெசேஜ் செய்யும்போது அதை ஒரு உரையாடலாக எடுத்து செல்வர்.
பெண்கள் சிலர் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க ஆபாசமாக உடைகள் அணிந்து டிக் டாக் வீடியோக்கள் செய்து பகிர்வது வழக்கமாகி வருகிறது. இது அவற்றை பார்க்கும் ஆண்கள் மட்டும் அல்லாது குழந்தைகள் மத்தியிலும் சஞ்சலத்தை ஏற்படுத்தும்.
ஆனால் இதில் மற்றொரு விபரீதமும் உள்ளது. ஆபாச கருத்துக்களை கமெண்ட்டுகளாக போடும் நெட்டிசன்கள் ஒருபக்கம் என்றால், இந்த குடும்ப பெண்களின் வீடியோ, மற்றும் அவர்கள் உருவ படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அதை ஆபாசமாக சித்தரித்து அதற்குரிய வெப்சைட்டுகளில் பதிவேற்றி ரசிப்போர் மற்றொரு பக்கம். இதனால் பல குடும்ப பெண்களின் வாழ்க்கை சீரழிந்து போகிறது.
டிக்டாக் செயலி குறித்தும் அதில் பதிவிடப்படும் வீடியோக்கள் குறித்தும் பலமுறை விரிவாக எச்சரித்தாலும் நம்ம ஊர் பெண்கள் சிலர் அதனை பெண்ணிய அடக்கு முறையாக நினைத்து காதில் போட்டுக் கொள்வது கிடையாது.
காலம் காலமாக பெண்களை ஒரு பொருளாகவே பார்த்து பழக்கப்பட்ட சில சமூக விரோதிகளின் கைகளில், பெண்களின் புகைப்படங்கள் கிடைத்தாலே ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடும் இந்த காலத்தில், அவர்களுக்கு ஏற்ற முகபாவத்துடன் ஆடிப் பாடி வீடியோ வெளியிட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
இருந்தாலும் ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்த நான் கேள்வி பட்ட பல கதைகளில் ஒரு கதையை இ‌ங்கே பதிவிடுகிறேன்.
பெங்களூர் நகரையடுத்து ஆனேக்கல் பகுதியிலுள்ள ஒரு 20 வயது கல்லூரி பெண்ணுக்கும் நடந்துள்ளது. கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர்தான் அந்த பெண். இவருக்கு சுமார் 1.3 லட்சம் ஃபாலோவர்கள் இருக்கிறார்கள் என்றால், எந்த அளவுக்கு இவர் டிக்டாக் ஆப்பில் பிரபலம் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். இதுவரை அவர் பெற்ற லைக்ஸ் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டுமாம். கடந்த ஜனவரி மாதம் முதல், கவிதாவை ஆபாச பட நடிகை போல சித்தரித்து, மார்ப்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் சுற்ற ஆரம்பித்துள்ளன. இது கவிதா கவனத்திற்கு வந்தபோது இடிந்தே போய்விட்டார். என்ன செய்வது என்று யோசித்து, இந்த தகவலையும் அவரே ஒரு வீடியோவில் கூறி, இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து அதையும் டிக்டாக்கில் பதிவேற்றினார். ஆனால், பிரச்சினை அதிகரித்ததே தவிர, ஓய்ந்தபாடில்லை. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான, கவிதா, இதுகுறித்து, பெங்களூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இப்படி இன்னும் எத்தனையோ கதைகள்.
பெண்களே.... சம உரிமை Feminism என்று  TikTok செய்வேன் என்று சாக்கு சொல்லிக்கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். இல்லை இது எங்களுக்கு கிடைத்த freedom சம உரிமை என்றால் சம உரிமை கோர இன்னும் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றனவே... சீதனத்திற்கு எதிராக குரல் கொடுங்கள்....ஆண் பிள்ளைகள் பெற்றால் ஆணும் பெண்ணும் ஒன்றே என்று சொல்லி கொடுங்கள்..... கணவனின் பொருளாதார பிரச்சனைகளில் பங்கு கொள்ளுங்கள்..... கல்வியிலும் தொழிலிலும் தொழில்நுட்பத்திலும் ஆண்களுக்கு நிகராக போட்டி போடுங்கள்..... தந்தை கடன் பட்டு இருந்தால் அண்ணனோ தம்பியோ அடைப்பான் என்று விலகி நிற்காமல் அதில் பங்கு கொள்ளுங்கள்....சுயமாக bill pay பண்ணுங்கள்.... இது போன்றவைதான் உண்மையான சம உரிமை.
சிலர் என்னுடைய நடிப்பு திறமையை காட்ட தான் செய்கின்றேன் என்றால் ஆட்சேபனை இல்லை.. வரைமுறை பேணுவது சால சிறந்தது. ஆடை விடயத்திலும் சரி TikTok செய்யும் concept selectionலும் சரி தனி மனித ஒழுக்கம் முக்கியம்.
தங்களது குழந்தைகள்  டிக் டாக்-ஐ உபயோகிப்பது தெரிந்தால் பெற்றோர்கள் கவனமாக இருப்பது முக்கியம். அது போல பெண்களும் நேர்த்தியான முறையில் தங்களை தாங்களே காண்பித்துக்கொள்வதும் முக்கியம். இல்லையேல் அது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

Saturday, February 29, 2020

பெண்களை மிரட்டும் மார்பகப் புற்றுநோய்



பெண்களை மிரட்டும் மார்பகப் புற்றுநோய்

பெண்களின் மார்பகம் என்பது ஆண்களுக்கு என்றுமே சுவாரஸ்யமானதாகவும், இச்சைக்குரியதாகவும் இருந்துவருகிறது.
தாய்ப்பாலில் தொடங்கி முடி நரைத்த பின்னும்கூட, பெண்களின் மார்பகம் சார்ந்த ஆர்வமும், அதன் மேலுள்ள இச்சையும், அநேகமான ஆண்களுக்கு என்றும் குறைவதே இல்லை. ஆனால், பெண்களின் மார்பகம் பெரும்பாலும் பெண்களுக்கு ஒரு சுமையாகவே இருந்து வருகிறது.
மார்பகப் புற்றுநோய்(Breast cancer) என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும், இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். நாளங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கு நாள புற்றுநோய் (டக்டல் கார்சினோமாஸ்) என்று பெயர். பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 2வது இடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆகட்டும், வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவிகள் ஆகட்டும், பெரும்பாலும் தங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதில்லை. பெரும்பாலும் நோய் முற்றிய நிலையில் தான் அவர்கள் சிகிச்சைக்காகவே செல்கின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களை பெரிதும் தாக்கும் நோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய்.
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய் தான். மார்பக புற்றுநோய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அதன் ஆரம்பகால அறிகுறிகள் பற்றி சரியாகத் தெரிந்து கொண்டால், ஆரம்பத்திலேயே அதற்குரிய சிகிச்சைகளைப் பெற்று, எளிதில் குணமடைய முடியும். அதனால் தான் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயுடன் போராடுபவர்களை நினைவு கூறும் வகையில் பிங்க் நிற ரிப்பன் அணியப்படுகிறது.
அறிகுறிகள்
1. முக்கியமானது மார்பில் தோன்றும் வீக்கங்களும் கட்டிகளுமாகும். வலி இருக்கிறதோ இல்லையோ எத்தகைய மாற்றங்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவையே.
2. மார்புக் கச்சையின் அளவும் ஆரோக்கியமும் சாதாரண அவதானத்தில் அல்லது கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது மார்பக அளவுகளில் மாற்றம் தென்பட்டால் அசட்டை செய்ய வேண்டாம். சிலருக்கு இயல்பிலேயே ஒரு மார்பு மற்றதைவிடப் பெரிதாக இருக்கும். இது பயப்பட வேண்டியதில்லை. ஆனால் அந்ந அளவுகளில் புதிய மாற்றம் ஏற்பட்டால் கவனத்தில் எடுப்பது அவசியம்.
3. மார்பின் மேற்பரப்பில் ஏதாவது பள்ளம் அல்லது உட்குழிவு ஏற்பட்டால்.
மார்பக தோலின் மிருதுத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டால், முக்கியமாக தோடம்பழத்தில் உள்ளது போல சிறு திட்டிகளும் பள்ளங்களுமாக மாற்றம் ஏற்பட்டால்.
முலைக்காம்பின் தோற்றத்தில் மாற்றம். அல்லது துருத்திக் கொண்டிருந்த முலைக்காம்பு உள்வாங்கப்பட்டால்.
4. முலைக் காம்பின் ஊடாகத் திரவம் வெளியேறினால்.
5. மார்பகத்தில் வலி ஏற்பட்டால். சில பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வழமையாக வலி ஏற்படுவதுண்டு. இதைத் தவிர ஏதாவது வலி ஏற்பட்டால் மருத்துவரைக் காண வேண்டும்.
பெண்கள் சிறுவயதிலேயே பூப்படைவது, 30 வயதுக்குப் பிறகு நடக்கும் திருமணங்கள், அதன் தொடர்ச்சியாக நடக்கும் குழந்தைப்பேறின்மைக்கான தொடர் ஹார்மோன் சிகிச்சைகள், டெஸ்ட் டியூப் பேபி போன்ற செயற்கைக் கருத்தரிப்பு முறைகள் மற்றும் தாமதமாகும் மெனோபாஸ் போன்றவைதான் மார்பகப் புற்றுநோய் வர முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் உறவினர்களில், குறிப்பாக தாய் அல்லது சகோதரிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால் அந்தக் குடும்பத்துப் பெண்ணுக்கு இந்தப் புற்றுநோய் வர 10 சதவிகித வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது. குரோமோசோம்களில்  BRCA 1&2 என்ற மரபணுக்கள் தோன்றுவதும்கூட மார்பகப் புற்றுநோயை உருவாக்கலாம்.
உடல்பருமன், உடற்பயிற்சியின்மை, புகை மற்றும் மதுப்பழக்கம், ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், ஒவ்வாத மேற்கத்திய உணவுப் பழக்கவழக்கங்கள், அதிகக் கொழுப்பு உணவுகள் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களையும் காரணங்களாகக் கோடிட்டுக் காட்டுகிறது உலகப் புற்றுநோய் மையம். இவ்வளவு கொடுமையான நோயை வரும்முன் கண்டறிவது எப்படி என்று தெரியவேண்டியது அவசியம். நமக்கு நாமே பரிசோதித்துக் கொள்ளும் மார்பக சுயபரிசோதனை முறையும், மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யும் `மேம்மோகிராம் ' (Mammogram) முறை மூலமும்  மிகவும் எளிதாகப்  புற்றுநோயைக் கண்டறியலாம் என்கின்றனர் பெண்கள் நல மருத்துவர்கள்.
மார்பக புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மருத்துவமனைக்கு சென்று தான் செய்து கொள்ள வேண்டும் என்றில்லை. சில எளிய கருவிகளின் மூலம் பெண்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து மார்பக புற்றுநோய் குறித்து அறிந்துகொள்ள முடியும். மார்பக புற்றுநோய் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்வதன் மூலம் அதனை குணப்படுத்துவது இன்னும் எளிதாகும். மார்பக புற்றுநோயைக் கண்டறியும் 5 முக்கிய கருவிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
1. பிராஸ்டர் புரோ - மார்பக ஆய்வு முறை (Braster Pro-Breast Examination System) பிராஸ்டர் புரோ எனும் இந்த கருவி வைஃபை மூலம் இயங்கக் கூடியது. தன்னுள் இருக்கும் கேமரா மற்றும் சேமிப்புக் கருவிகளை கொண்டு சம்மந்தப்பட்ட இடத்தை மட்டும் புகைப்படம் எடுத்து சேமித்துக் கொள்ளும். 15 படங்கள் வரை சேமித்துக் கொள்ளும் வசதி இதில் உள்ளது. மொபைல் செயலி வழியாக செயல்படக்கூடிய இந்த கருவியால் தானாக இயங்கவோ அல்லது படத்தை டிரான்ஸ்பர் செய்யவோ முடியாது. இதற்காக பிராஸ்டர் கேர் எனும் பிரத்கேய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தான் எடுக்கும் புகைப்படங்களை கொண்டு மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் இருக்கிறதா இல்லையா என்பதை இந்தக் கருவி கண்டறிந்து தெரிவிக்கும்.
2. பிரஸ்ட்லைட் (Breastlight ) பிரஸ்ட்லைட் எனும் இந்த கருவியை பெண்கள் தங்கள் வீட்டிலேயே பயன்படுத்தலாம். சுயபரிசோதனை செய்து கொள்ள உதவும் இந்த கருவி, ஒரு சிகப்பு நிற லைட்டின் மூலம் நோய் அறிகுறிகளைக் கண்டறிந்து சொல்லும். ஒருவேளை மார்பகத்தில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அந்த பகுதியில் மட்டும் சிவப்பு நிற வெளிச்சம் ஹைலைட் செய்து காட்டப்படும். இந்த ஒளியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
3. பிங்க் லூமினஸ் (Pink Luminous) பிங்க் லூமினஸ் எனும் இந்த கருவி, அதன் பயனாளர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வையும், மன அமைதியையும், நம்பிக்கையையும் தரக்கூடியது. பிங்க் லூமினஸ் கருவி பெண்களுக்கு ஒரு புதுமையான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கருவியாகும். இதன் மூலம் அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தடியே சுயபரிசோனை செய்துகொள்ளலாம். இந்த கருவியின் மூலம் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் அசாதாரண விஷயங்கள் இருந்தால் அதனை எளிதாக அறிந்து கொள்ள முடியும். இதனால் மிக விரைவாக அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள பிங்க் லூமினஸ் பெரிதும் உதவுகிறது. 
4. இன்ப்ராரெட் மார்பக புற்றுநோய் சுயபரிசோதனை மசாஜர் கருவி இது ஒரு புதுமையான நம் கைகளால் பயன்படுத்தக்கூடிய சுயபரிசோதனை மற்றும் சுய மசாஜ் கருவி. இதில் உள்ள சிகப்பு நிற பீம், மார்பகத்தில் உள்ள கட்டிகள், அசாதாரண சதைகள் ஆகியவற்றை கண்டறிய உதவும். மேலும், இதில் உள்ள மசாஜ் கருவி, மார்பக நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவும். இதில் இருந்து வெளியேறும் சிகப்பு ஒளி, மார்பகத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும். இதில் உள்ள 'கேர்' மோட் சிகப்பு ஒளி மற்றும் மசாஜ் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் செயல்படுத்தி மார்பகம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும். ரேடியேஷன் மற்றும் பக்க விளைவுகள் இல்லாத, 100 சதவீதம் பாதுகாப்பான கருவியாக உலக அளவில் சிறந்த கருவி என போற்றப்படும் இக்கருவி மார்பகம் நோய்களை தடுக்கிறது.
5. ஐபிரஷ்ட் எக்சாம் ( iBreastExam ) மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான வசதி வாய்ப்புகள் குறைவாக உள்ள வளர்ந்து வரும் நாடுகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள கருவி தான் இந்த ஐபிரஷ்ட் எக்சாம். மார்பகத்தில் உள்ள சதைகளில் புற்று நோய் பாதிக்கப்பட்ட சதைகள் மற்றும் பாதிப்பில்லாத சதைகளை தனித்தனியே கண்டறிவதற்கு இந்த கருவி உதவும். இதனை மார்பகத்தின் மேல் பயன்படுத்தும் போது, இரண்டு சதைகளின் இடையே உள்ள வித்தியாசத்தை துல்லியமாக கண்டறியும்.
ஆக, பெண்களே... வெட்கம் என்று சில விடயங்களில் பாரா முகமாக இருந்து விடாமல் உங்கள் ஆரோக்கியத்திலும் சுக வாழ்விலும் சற்று கவனம் செலுத்த நேரம் ஒதுக்குங்கள்.

Thursday, February 27, 2020

வரதட்சணை

வனத்தில் உள்ள முட்கள் எல்லாம்
மனதில் ஆறாத ரணங்களாய் தைத்திடவே...
ஊமையாகிறாள் ஆகிறாள் முதிர்கன்னி....
பளபளக்கும் முத்தொன்று
சிற்பிக்குள் அடைபட்டு
அழும் கண்ணீரை அறிவார் உண்டோ....

வரதட்சணை அரக்கர்களே !
பெண்களின் வாழ்க்கையை
கடலுக்குள் முழ்கடிப்பது போல
வரதட்சனைகளுக்குள் முழ்கடிக்காதீர்....

பொருளென நினைத்தீரோ ?
பெண்ணின் மனதை...

திருமணச்சந்தையில்,
தன் மகளை விலையேற்ற,,,!
அடிமாட்டுச் சந்தையில்,
தான் வளர்த்த மாடுகளுக்கு
விலை வைத்துவிட்டார்...!!
தந்தை ஒருவர்....
ஒரு வயதிற்கு மேல் பெற்ற பெண்ணையே பிரச்சனை என்றார் இன்னொருவர்....
ஒரு பெண்ணை ஒப்பேற்றவே ஓடாய் தேய்ந்தேனே மற்றவர்களுக்கு... என உள்ளூர நொந்தார் வேறொருவர்.....
ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டிதான் என சும்மாவா சொன்னார்கள்....
ஒரு வேளை....
மகளைகளை பெற்றாலே குற்றமோ..... அதற்கான அபராதம்தான் இந்த வரதட்சனையோ....

பறவைகள்... ஏன் முதுகெலும்பு இல்லா புழுக்கள்கூட தனக்கான வீட்டை,பொருளை தானே தேடிக்கொள்கின்றன... நாம் இன்னும் மனிதன் என்று பீற்றிக்கொள்கிறோம்.... மனிதம் இல்லாமல்....

ஆணாணவன் தனக்கான வாழிடத்தை தானே அமைக்க கற்றுக்கொண்டானேயானால்- ஓர் ஆண் ஓர் வீட்டை மட்டுமே கட்ட கடமைப்பட்டவன் ஆகிறான்..... பல அப்பாவி அபலைகளின் கண்ணீர் துடைக்கும் கைகுட்டையாகிறான்.....

உடலுக்குள்
உயிர் ஒன்றே ஆணுக்கும்... பெண்ணிற்கும்...
உருவம் மாறி முதுமையெய்து உன் தாரத்தில் கோடி தாயை உணருவாய்.....
அப்போது......உன்-கண்கள் பனிக்கும்.....
உன்-கர்வம் கலையும் அந்த
கணங்களில்
காசு காற்றில்
கருகிய சாம்பலென உணர்ந்து வருந்தாதே மனிதா....

முதலில் மனிதம் பேசு
பின் காதல் பேசலாம்...

பெண்ணின் புத்திரனாய்
பெண்மை உணர்ந்திடு ...
நீயும் ஓர் நாள் தந்தையாவாய் மறந்துவிடாதே....

ஆணினமே.... உன்கோர் வேண்டுகோள்.....
வேரை விட்டு வெளியே வா
வரதட்சணைப் புற்றை உடைத்தெடு
முடிய கதவிற்கு பின்னே மூடாத கனவுகளுடன் இருக்கும் தேவதைகளை வாழ விடு-
உனக்காயினும் அவளிற்காயினும் முதுமை இருள் சூளுவதற்குள்...!


 பஸீன் றிபாயா சமீம்

சண்டைகாரி

சண்டைக்காரி
•••••••••••••

ஆம் நான் சண்டைக்காரி தான்
ஏனென்றால் முதுகுக்கு பின்னால்
பேசத் தெரியாமல் முகத்திற்கு முன்னால்
பேசுவதனால்.....

ஆம் நான் அகங்காரம் பிடித்தவள் தான்
ஏனென்றால் அதிகாரம் செய்பவரைக் கூட
ஆளுமை செய்வதனால்.....

ஆம் நான் கோபக்காரி தான்
ஏனென்றால் தவறுகளைக் கண்டு
சகித்துக் கொள்ளாமல் பொங்கி எழுவதனால்.....

ஆம் நான் வாயாடி தான்
ஏனென்றால் பேதம் பார்க்காமல்
வாதம் செய்வதனால்....

ஆம் நான் ராங்கிகாரி தான்
ஏனென்றால் கடினமான தருணங்களில் கூட
சோர்ந்து போகாமல்
எதிர்த்துப் போராடுவதனால்......

ஆம் நான் கண்டிப்புக்காரி தான்
ஏனென்றால் வரம்பு மீறுபவர்களிடம் - என்
வலிமையை காட்டுவதனால்......

ஆம் நான் முசுடு தான்
ஏனென்றால் முரண்டு பிடிப்பவர்களிடமே
முரட்டுதனமாக நடப்பதனால்....

ஆம் நான் பிடிவாதக்காரி தான்
வெறுப்பின் வலியையும்
சோதனையின் ரணங்களையும்
தனியாக தாங்கிக் கொள்வதனால்.....

ஆம் நான் திமிர்காரி தான்
ஏனென்றால் உண்மை சுடும்
என்பதை உணர்ந்து(த்தி) நடப்பதனால்.....

ஆளும் கட்சி யாரெனில்
எனக்கென்ன?
குறுகிக் கிடக்கும் குறில்
நானில்லை !


நேற்று என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்த நாள்... ஏதோ ஒன்றை சாதித்து விட்டதாய் ஓர் உணர்வு... அடி நெஞ்சில் ஓடி கொண்டிருந்த நெருப்பு ஆற்றின் மேல் ஆலங்கட்டி மழை பெய்தது போல் ஜிவ்வென்று இருந்தது. என் கெட்ட பழக்கங்களில் ஒன்று எழுந்த உடன் Facebook scroll செய்வது அப்படியாக விடிந்த நேற்றைய காலை என் கண்ணில் பட்ட அந்த செய்தியே என் பூரிப்புக்கு காரணம்... எனக்கும் அச்செய்திக்கும் எந்த விதமான நேரடி தொடர்பும் இல்லாத போதும் ஏதோ ஒன்றை அடைந்து விட்டதாய் ஏற்பட்ட உணர்ச்சி என் உடல் முழுவதும் பரவி ஓர் புதிய தைரியத்தையும் உற்சாகத்தையும் குடுத்தது.

ஆம்... ஆபத்தில் உதவி கோரிய அப்பாவி பெண்ணை உதவி செய்வதாய் பாசாங்கு செய்து துகில் உரித்து... காம இச்சைக்காய் அவளை பிழிந்து சக்கை ஆக்கியதோடு நில்லாமல் அவளை உயிருடன் எரிந்து அதில் இன்பம் கண்ட நான்கு மிருகங்களை.. மன்னிக்கவும் நான் மிருகங்களை கேவல படுத்த விரும்பவில்லை... அந்த நான்கு ஈன பிறவிகளும் அந்த அபலை எரித்து கொலை செய்யப்பட்ட அதே பாலத்தின் அடியில் வைத்து என்கவுன்ட்டர் செய்யப்பட்ட தரமான சம்பவம் தெலுங்கானா மாநில போலீசாரால் நிகழ்த்தப்பட்டது... மகிழ்ச்சி... மிக்க மகிழ்ச்சி...

இதற்கிடையில் திடீர் வெள்ளை றெக்கை முளைத்த சமாதான புறாக்களாய் சிலர் இது மனிதாபிமானம் அற்ற செயல்... சட்டத்தை கையில் எடுத்தது தவறு... இது அநீதி... போலீஸ் அராஜகம் என்று எல்லாம் கொக்கரிக்க இன்னும் சில ஜேம்ஸ் பாண்ட்கள் இவர்கள் உண்மையான culprits இல்லை.. வெறும் கண்துடைப்பு என துப்பறியும் சிறுகதை... நாவல்... எழுத ஆரம்பித்ததை பார்த்த பின் இப்பதிவை இடலாம் என தீர்மானித்தேன்.

பதிவுக்குள் போகும் முன் நான் நியாயம் இல்லமால் பெண் உரிமை சம உரிமை என கூக்குரல் இடும் fake feminist இல்லை என்பதை பதிவு seiya விரும்புகிறேன்.

சரி coming back to the point... நீதி தேவதைகளுக்கு எல்லாம் சில கேள்விகள்...

1. சட்டத்தின் கையில் ஒப்படைத்தால் சிறுவன் என சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பீர்களா? இல்லை பாவம் அறியாமல் தவறு செய்தான் நன்னடத்தை உள்ளவன் என்று 2 வருடங்களில் பொது மன்னிப்பு கொடுத்து TATA காட்டி வழி அனுப்புவீர்களா? இல்லை இல்லை நாங்கள் சட்ட படி மரண தண்டனை வாங்கி கொடுப்போம் என்று அவர்களுக்கு 3 வேளையும் சாப்பாடும் போட்டு ஜெயிலில் வாடட்டும் என்பீர்களா?

மூன்றே வயதான குழந்தையை கற்பழித்து கொன்றவனுக்கு நீங்கள் மரண தண்டனை வாங்கி கொடுத்த லட்சணத்தைத்தான் பார்த்தோமே... அப்டியே பாத்தாலும் இதுவும் ஒரு வகையான மரண தண்டனை தான்...

இவர்கள் உண்மையான culprits இல்லை வெறும் கண்துடைப்பு என்று செல்பவர்களுக்கு..

2. உங்கள் ஜேம்ஸ் பாண்ட் மூளை நன்றாக வேலை செய்கிறது வாழ்த்துக்கள்... விரைவாக உங்கள் துப்பறியும் பணியை ஆரம்பித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவுங்கள் அப்போது தான் இந்த 4 அப்பாவிகளையும் சுட்ட போலீஸ் அராஜகத்திற்கு தண்டனை பெற்று குடுக்கலாம்.

இது ஒரு அநீதியான செயல் என்று வருத்தப்படும் இளகிய மனசுக்கார்களுக்கு...

3. அந்த பெண்ணுக்கு நடத்த அநீதிக்கு... ஓ sorry sorry 🙏 இந்த பொண்ணுங்க இறுக்கமான உடை அணிந்து சென்றால் பாவம் பசங்க சபல படத்தானே செய்வார்கள்... நாம இந்த 4 பேர்க்கும் நடந்த அநீதி பற்றி மட்டும் பேசுவோம்... (ஒரு photo இணைகின்றேன் பார்த்து விட்டு எது அநீதி என்று முடிவு செய்து கொள்ளுங்கள்)

பணக்கார வீட்டு பசங்க செய்தால் இப்படி செய்து இருக்க மாட்டார்கள் என்று ஆதங்க படுபவர்க்கு...

4. எங்கோ ஒரு புள்ளியில் நானும் உங்களுடன் ஒத்து போகிறேன் ஆனால் முழுவதும் ஆக அல்ல... இதை நான் ஒரு விடிவு காலத்தின் ஆரம்பமாய் பார்கிறேன்... எதற்கும் ஓர் ஆரம்பம் வேண்டாமா? இனி பெண்ணை தடவுவதற்கு... தொடுவதற்கு... முன் ஒரு முறைக்கு 100 முறை யோசிப்பார்கள் இல்லையா?? இதுவே பெரிய வெற்றி தானே...

..................................

அந்த பெண் எப்படியெல்லாம் கெஞ்சி மன்றாடி இருப்பாள்... ? யாரவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என ஏங்கி தவித்து இருப்பாளோ...? இவை  இயன்ற வரை பெண் உறுப்பை சிதைத்து தன் இச்சைகளை எச்சிலாய் உமிழ்ந்து விட்டு போகும் குறி கொண்ட மிருகங்கள் என ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் வெறுத்து இருப்பாளோ... ? இல்லை... பெற்ற தகப்பனாவது தன் உயிர் காக்க மாட்டானா என்று தவித்து இருப்பாளோ.... ? இல்லை... துகில் உரிக்கையில் எந்த கண்ணனும் தடுக்கவில்லே என கடவுளை வசைபாடி இருப்பாளோ.... ? பாவம்... எல்லாமும் முடிந்து உடலும் மனமும் சிதைந்த பின்னும் உயிர் பிழைப்போம் என நம்பி தொலைந்து ஏமாறி இருப்பாளோ... ? இல்லை பெண்களை வெறும் சதையாகவும் போகப்பொருளாகவும் பார்க்கும் ஆண்களுக்கு முன்னால் சதை பிண்டமாய் வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்து இருப்பாளோ.... ?
அவள் உயிர் பிரியும் தருவாயில் அவள் மன ஓட்டம் என்னவாக இருந்திருக்கும்....? ஒரு வேளை காப்பற்ற துப்பு இல்லாத இந்த கேடுகெட்ட சமூகத்தில் வாழ்வதை விட சாவதே சாகடிக்க படுவதே மேல் என்று கண்ணை மூடி இருப்பாளா...?

 இந்த பன்றி கூட்டத்தின் பசிக்கு இரையாகி போன பேதைக்கு எம்மால் செய்ய கூடிய மிக சிறிய உதவி இந்த தண்டனையை வரவேற்பது தான்... இது மேலும் அமுலில் இருக்கவும் வேண்டும்... எ‌ம் கையறு நிலைக்கு தண்டனையாய் குறைந்த பட்சம் இதை விமர்சனம் செய்யாமல் இருப்போம்..

நன்றி...

Fazeen Rifaya Sameem

பாகுபலி style இல் சொன்னால் பெண்களை தொட்டால் வெட்ட வேண்டியது கைகளை அல்ல தலையை....
#உறவுகள்_தொடர்கதையாக
#கண்டிப்பா_யூஸ்_ஆகும்...
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர். (பண்ணவும் நினைக்காதீர்)...

2. முடிந்தவரை அடுத்தவரின் Car மற்றும் Bike கடன் கேக்காதீர்...

3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள்...

4. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள்
 (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !)...
*அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள்.
*அவர்கள் போனைக் கேட்காதீர்கள்.
*அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.

5. வயது, சம்பளம், விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்...

6. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள்...
(no one likes advices.)

7. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம். 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம்.
(unless they are your spouse / lover)

8.ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்...

9.குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள்,
ஏன்? என்று காரணம் கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்...

10. ஒருவரின் வேலைb விபரங்களை துருவிதுருவி ஆராயாதீர்கள்..
அவர்கள் பொருளாதாரத்தில் உதவுபவர்களாக இல்லாத பட்சத்தில்...

Copied

மாதவிடாய்

மாதவிடாய்...

மாதவிடாய்... இன்னும் இதை நேரடியாக பேசத் தயங்கும்.. ஏன் பேசவே கூடாத பேசவே முடியாத சில தலைப்புகளில் முக்கியமான தலைப்பாக கருதும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

மாதவிடாய் நாளில் இருக்கும் ஒரு பெண்ணிடம், என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க என்று ஒரு ஆண் கேட்டால், இன்னும் உடம்பு சரியில்லை அல்லது தலை வலிக்கிறது என்கிற மறைமுக விளையாட்டையே நாம் ஆண்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் ஆண் ஆசிரியரிடமோ அல்லது ஆண் சக ஊழியர்களிடமோ ‘எனக்கு இன்னைக்கு Periods’- என்று தயங்காமல் சொல்லும் வெளிப்படைத்தன்மை பெண்களுக்கு வந்துவிட்டதாகத் தோன்றவில்லை.

அதைவிடக் கொடுமை, பள்ளிகளிலோ அல்லது அலுவலகங்களிலோ மாதவிடாய் நாள் தொடங்கிவிட்டால் அங்கிருக்கும் ஆண்கள் கண்களில் படாமல் அந்த நாப்கினை எப்படி டாய்லட்டிற்கு எடுத்துச் செல்வது என்று யோசித்தே சோர்ந்து போன அனுபவம் நம்மில் பலருக்கும் உண்டு. அதை ஒரு கவர் அல்லது பேப்பரில் மடித்து, ஆடைக்குள் எங்காவது சொருகிக்கொண்டு, இயல்பாக நடந்து டாய்லட்டிற்கு செல்வதற்குள் பாதி உயிர் போய்விடுகிறது. இதில் யாரவது அதை கவனித்துவிட்டார்களா என்கிற சிறுபிள்ளைத்தனமான பயம் வேறு. ஏன் மாதவிடாய் குறித்த இத்தனை நடைமுறை சிக்கல்கள்?

இதற்கு ஒரு முக்கிய காரணம், நம் ஆண்களுக்கு இன்னும் மாதவிடாய் குறித்த புரிதல்  குறைவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. இது பெண்களின் அந்தரங்கமான விசயம்; எனவே இதிலிருந்து சற்றே விலகியிருத்தல் சாலச் சிறந்தது என்றே ஆண்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு காய்ச்சல் வந்தாலோ அல்லது சளிப்பிடித்தாலோ அது அவர்களின் அந்தரங்கம் என்று நாம் விலகுவதில்லை. அதுபோலதான் மாதவிடாயும் என்கிற இயல்பான சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டியக் கட்டாயத்தில் ஆண்கள் இருக்கிறார்கள். அதுவே பெண்களுக்கு இதுப் பற்றிய வெளிப்படைத்தன்மையோடு இருப்பதிலும், உதவி கேட்பதிலும், இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை ஓரளவேனும் குறைக்கும்.

அதேபோல் பெண்களும், மாதவிடாயைக் குறித்த உரையாடல்களை இந்த சமூகத்தில் சகஜமாக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்படும் பொழுதுதான் இந்த நடைமுறைச் சிக்கல்கள் அகலும். இன்னும் நம் சமூகத்தில் அம்மாக்கள் தன் மகன்களிடம் இதுகுறித்து பேசுவதைத் தவிர்ப்பது என்பது மிகப்பெரிய அபத்தமாக இருக்கிறது. ஏனென்றால், ஆண்களின் இதுபோன்ற அடிப்படைக் கற்பிதங்கள் அவர்களின் அம்மாவிடமிருந்தும், வீட்டிலிருந்துமே தொடங்குகின்றன என்பது எனது கருத்து.

இந்த சமூகம் எவ்வாறு பார்க்கிறது? மாதவிடாயைப் பற்றி இந்த சமூகம் தெரிந்து வைத்திருக்கிறதா?...அப்படியே தெரிந்துவைத்திருந்தாலும் அது சரியானதாக இருக்கிறதா??...பார்க்கலாம்...

மாதவிடாயைப் பற்றி அறிவியலாக சொல்ல வேண்டுமென்றால் 'பெண்களின் அடிவயிற்றில் கருப்பைக்கு இரண்டு பக்கங்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக சினைப்பைகள்(Ovary) இருக்கும்...சினைப்பையில்தான் பெண்கள் கருத்தரிப்பதற்கான கருமுட்டைகள் வளர்கின்றன...இந்தக் கருமுட்டை கருக்குழாய்(Fallopien tube) வழியாக கருப்பையை அடையும்...கருமுட்டை ஆணின் விந்தணுவோடு இணைந்தால் கரு உருவாகும்...அந்த கருமுட்டை ஆணின் விந்தணுவோடு சேரவில்லையென்றால் அது உடைந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும்...அங்கே இருக்கக்கூடிய பஞ்சு போன்ற மென்மையான திசுப்படலம் கரு உருவாகாதபோது உடைந்து இரத்தமாக வெளியேறும்...இந்த இரத்தப்போக்கு மாதம் ஒருமுறை 3-5 நாட்கள் வரை நடக்கும்...இதுதான் மாதவிடாய்....

படிப்பறிவில்லாத மக்களுக்கு இதனைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாரான பின்பு மாதாமாதம் நடக்கக்கூடிய இரத்தப்போக்குதான் மாதவிடாய்.

 மாதவிடாய் நடக்கும் முன்பு இருக்கக்கூடிய நிலை உளவியலாக மிகப்பெரிய சிக்கலைக் கொடுக்கும்...இதனை premenstrual syndrome என்பர்...மாதவிடாய் தோன்றுவதற்குமுன் கவலை,பதற்றம்,ஆர்வமின்மை,அசதி,கோபம்,எரிச்சல்,தூக்கமின்மை,பாதுகாப்பற்றதாக உணர்தல்,தனிமை விரும்புதல்,தான் அழகாக இல்லை என நினைக்கும் பெண்களுக்கும் சமூகத்தால் அங்கீகாரம் கிடைக்காத பெண்களுக்கும் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை,இந்த அனைத்திற்கும் உச்சமாக தற்கொலை எண்ணம் வரை இந்த premenstrual syndrome என்று சொல்லக்கூடிய மாதவிடாய்க்கு முந்தைய நிலையில் பெண்களுக்குத் தோன்றும்...பல நேரங்களில் இந்த எண்ணங்கள் மாதவிடாய் தொடங்கி முடியும்வரை இருக்கும்...சில சமயங்களில் பெண்கள் தேவையில்லாமல் அதிகளவு கோபப்படுவதற்கான காரணம் இதுதான்...

மாதவிடாய் சில பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் மாதாமாதம் ஏற்படாமல் 2,3 மாதத்துக்கு ஒருமுறை 6 மாதத்துக்கு ஒருமுறை என ஏற்படும்...இதனை Irregular periods என்பர்...அவ்வாறு ஏற்படும்போது 6 மாதத்திற்கும் சேர்த்து இரத்தப்போக்கு ஒரே சமயத்தில் வெளியேறும்....இந்த இரத்தப்போக்கானது தொடர்ந்து 15,20 நாட்கள் வரை இருக்கும்...இவ்வாறு Irregular periodsஐ சந்திக்கும் பெண்களுக்கு தசைப்பிடிப்பு,மார்பக வலி,மார்பக வீக்கம்,தலைவலி,தோள்மூட்டு வலி,தண்டுவட வலி,மனச்சோர்வு,எரிச்சல,உடல் அசதி,அடிவயிற்றுவலி,வாந்தி,குமட்டல் போன்றவை சொல்ல முடியாத அளவு ஏற்படும்...

இன்று பலரும் பெண்களின் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி இன்றைக்கும் கண்டுகொள்வதே இல்லை.
எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக அணுகக் கற்றுக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தில், மாதவிடாய் தொடர்பான சிலக் கேலிக்கூத்துகளும் நடந்துகொண்டிருக்கின்றன என்பது மறுக்க பட முடியாத உண்மை. இனியேனும் இது பெண்கள் பிரச்சனை என்று ஒதுங்கி நிற்காமல் ஆறுதலாக இருக்க முயற்சிப்பது அனைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

Dark Side of Trending Penguin 🐧

 Dark Side of Trending Penguin 🐧  இன்றைக்கு சமூக வலைத்தளம் முழுவதும் பேச்சு பொருளாய் மாறி இருக்கு ஒரு பென்குயின்…70km தூரம் எதையும் யோசிக்க...