Search This Blog

Wednesday, November 30, 2022

பெண்ணின் அறிவும் அழகுதான்…

 


படைப்புகளில் மனித படைப்பானது சிறப்பான படைப்பென்பது எந்தளவிற்கு நிதர்சனமோ அந்தளவிற்கு

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமார்..ˮ என்ற மகாகவிசுப்பிரமணிய பாரதியாரின் வாக்கும் நிதர்சனம்


ஆணும் பெண்ணும் சமம் என்று நம் அனைவர் மனதிலும் ஆழமாய் பதிந்து விடவேண்டும்நாடும்வீடும் வளம் பெறவேண்டுமெனில் பெண்கல்வி முக்கியமாகும்.

கல்வி ஒரு பொது உடைமை

அது நீயும் நானும் பெறும் பெருமை

அனால் இதில் ஏன் பெண்களுக்கு மட்டும் இத்தனை வேற்றுமை


பெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளதுதகவல் தொழில் நுட்பம்வளர்ச்சியடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும்ஆண்களை விட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர்.

சமூகத்தில் பெண்கள் தலை நிமிர்ந்து நடக்கவும்வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும்… கல்விபெண்களுக்கு மிக அவசியம்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்றார் பாரதி

பெண் கல்வி’ இங்கு அதிகார அறிவினால் கட்டப்படுகிறதுஇதனால் இயற்கையாகவே ஆண்-பெண் உறவுமுறையில் ஏற்படும் அதிகாரப் போட்டியில் தனது மேலாட்சியைக் கட்டமுயன்ற ஆண் சமூகம் முதலில்பெண்ணுக்கான அறிவு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதுஇதற்காக பல தந்திரங்களைக் கையாண்டுள்ளதுபால்ய விவாகம்கற்புக் கோட்பாடுதாய்மையைக் கொண்டாடுவதுகுழந்தைபேறு என்று பெண்களுக்குகற்பிக்கப்பட்ட வாழ்க்கை முறையைத் திணித்ததுஇது பெண்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாகஅமைந்ததுஅவர்களுக்கு சுமையாக மாறியது


ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் முதல் பள்ளிக்கூடமாகவும் பாலகப்பருவ ஆசிரியையாகவும் திகழ்பவள்தாயாகிய பெண்தான்அந்தத் தாய்க்கு நல்ல அறிவும்கேள்வி ஞானமும் இருந்தால்தான் அவளிடம் பாடம்கற்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் என்பதைத்தான் "தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலைஎன்கிறார்கள்ஆகவேஅவளுக்கு கல்வியறிவும் கேள்வி ஞானமும் வேண்டுமென்றால் கல்வி மிக அவசியமாகஇருக்கிறது

இவ்வுலகில் பெண்கள் கௌரவமாகவும் கம்பீரமாகவும் வாழ வேண்டுமெனில் பெண்களுக்கு கல்வியறிவுஅவசியம்பெண்கல்வி நாட்டுக்கு மிகவும் முக்கியமாகும்

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பெண் கல்வியிலும் தங்கியுள்ளதுபெண்கள் கல்வியால் தான் முன்னேற்றம்காண வேண்டும்.


பெண் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றம் பற்றி எல்லோரும் அறியும்படி கூறி பெண் விடுதலைக்கு பாடுபட்டபெரியார் “பெண் முன்னேற்றம் அவர்களின் முயற்சியாலேயே முடியும்ˮ என்றார்இன்று உலகின் பல்வேறுதுறைகளில் பெண்கள் தங்கள் கடமைகளை ஆற்றியுள்ளனர்விளையாட்டுத்துறை முதல் விண்வெளி ஆராய்ச்சிவரை பல்வேறு துறை வரை பல சாதனைகளைப் படைத்துள்ளனர்.

இன்று நாட்டில் பெரும் பதவிகளில் பெண்களின் பங்களிப்புள்ளதுபல துறைகளைப் பெண்கள் முனைப்புடன்நடத்தி வருகின்றனர்.

வைத்தியத்துறை,சட்டத்துறை,தொழில்நுட்பத்துறை ஏன் அரசியல் போன்ற பல துறைகளில் இவர்களின் பங்குஅளப்பரியதாகும்.


பெண்கள் கல்வி கற்கும் போது நாட்டில் சமுதாய ரீதியில் மாற்றங்கள் அதிகரிக்கும்குழந்தைத்திருமணங்களின் சதவீதம் குறையும்பெண்கல்வி மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்இதனால்பொருளாதார ரீதியில் அவர்கள் முன்னேற்றம் அடைவர்.

பெண் கல்வி மூலம் அறியாமை நீங்கும்உடல் சார்ந்த,உளவியல் சாரந்த,சமூகம் சார்ந்த உரிமைகளை அறிந்துகொள்ள முடியும்இதன் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராடும் துணிச்சல் ஏற்படும்.


கடந்த நாட்களில் தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக நடத்தப்பட்ட பெண்கள் எப்படி இந்த அளவிற்குஉயர்ந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் கல்வியே என புலப்படும்கல்விக் கண் என்று ஆன்றோரால்அழைக்கப்படும் கல்வியே மக்களின் கண்களை திறந்தது எனக் கூறலாம்.


எழுத்தாளர்கள்,இசையரசிகள்,சொற்பொழிவாளர்கள்,அரசியல் தலைவர்கள்,ஆராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறுதுறைகளிலும் கொடிகட்டிப் பறப்பது நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமையே பெண்களால் எதையும் சாதிக்கமுடியும் என்று நினைத்து சாதிப்பதோடு அன்றாடம் கிடைத்த ஊடகங்கள் அனைத்தின் மூலமும் போதித்துபெண்ணுரிமையை பேணிக்காக்க அயராது முயல வேண்டும்நாட்டை ஆட்சி செய்ய மன்னன் இருந்தாலும் ஒருவீட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்தான் வேண்டும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.



சிந்திக்கும் - மூளை 

அவளுக்கும் உண்டு 

நிந்திக்க வேண்டாம் -அவள் 

திறமையை …


ஆண் ஒருவர் கல்வி கற்றால் அவர் ஒருவருக்கு மட்டுமே அறிவு வளர்ச்சி அடையும்ஆனால்பெண் ஒருவர் கல்விகற்றாலோ அக்குடும்பம் முழுதும் கல்வி அறிவும் பெறும்ஏனென்றால் தாயின் மடியிலேயே குழந்தை கல்வி கற்கஆரம்பித்து விடுகிறதுஎனவே அனைத்து குழந்தைகளும் கல்வி அறிவு பெறும்பொழுது குடும்பம் முழுவதும்கல்வி அறிவு பெறுவது இயல்புதானே !

நாடும் வீடும் நலம் பெறவும் வளம் பெறவும் ஒளியோடு விளங்கவும் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும்பெண்களை கடவுளாக தொழுகின்ற நாமும் பெண்களை கல்வி பெறச் செய்வோம் . வீட்டில் விளக்கேற்றும்பெண்கள் உலகிற்கு ஒளியாகத் திகழ பெண்கல்வியை வளர்ப்போம்.


S.K.Fazeen

MSc(R),LLB(R),BTech(Hons)

Dip.in.Human psychology

Dip.in.Business Management 

Dip.in.English Language 

Dip.in.Spoken English

No comments:

Post a Comment

Dark Side of Trending Penguin 🐧

 Dark Side of Trending Penguin 🐧  இன்றைக்கு சமூக வலைத்தளம் முழுவதும் பேச்சு பொருளாய் மாறி இருக்கு ஒரு பென்குயின்…70km தூரம் எதையும் யோசிக்க...